மக்களவை விவாதத்தில் திமுக எம்பி ஆ.ராசா பேசிய போது, "காந்தியை கொலை செய்த கோட்சே 32 ஆண்டுகளாக காந்தி மீது வஞ்சம் கொண்டிருந்தேன். அதன்பிறகு தான் காந்தியைதிட்டமிட்டு கொலை செய்தேன். ஏனென்றால் காந்தி ஒரு சார்புக் கொள்கையுடையவர் என நினைத்தேன் எனக் கூறியிருந்தார்' எனத் தெரிவித்தார்.

Advertisment

rahul gandhi on privilege motion against him

அப்போது குறுக்கிட்ட மத்திய பிரதேச மாநில பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர், ''இந்த விவாதத்தில் தேச பக்தரை குறிப்பிடக் கூடாது'' என எதிர்ப்பு தெரிவித்தார். பிரக்யா சிங் தாகூர் கோட்சேவை தேசபக்தர் என்று மீண்டும் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கடுமையான விமர்சனத்துக்குள்ளான பிரக்யா, பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.

Advertisment

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, "தீவிரவாதி பிரக்யா, தீவிரவாதி கோட்சேவை தேசபக்தர் என்று அழைக்கிறார். நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் வருத்தமான நாள் "என்று தெரிவித்திருந்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவி்க்கப்பட்டு ராகுல் காந்தி மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் இதுகுறித்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, "நான் ட்விட்டரில் பதிவிட்ட என்னுடைய கருத்தில் தெளிவாக இருக்கிறேன். என்னுடைய கருத்தில் நிலையாக இருக்கிறேன். என் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுத்தாலும் அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். அதை வரவேற்கவும் செய்கிறேன்" எனத் தெரிவித்தார்.

Advertisment