rahul gandhi

குஜராத் மாநிலம் மோட்டேராவில் 800 கோடி செலவில்உருவாக்கப்பட்டு, கடந்த ஆண்டு, முன்னாள் அமெரிக்கஅதிபர் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் மோடியோடுஇணைந்து திறந்து வைத்த மைதானமேஉலகின்மிகப்பெரியமைதானமாகும். இந்த மைதானத்தில்,ஒரு லட்சத்து இருபத்து நான்கு பேர் அமர்ந்துபோட்டியைப் பார்க்கலாம். முதலில்‘சர்தார் வல்லபாய்படேல்மைதானம்’ எனப் பெயரிடப்பட்ட மைதானம், இன்று 'நரேந்திரமோடி மைதானம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

மேலும், இந்த மைதானத்தின் பந்து வீச்சு முனைகளுக்கு, ரிலையன்ஸ் முனை எனவும், அதானி முனை எனவும்பெயரிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் மோடி அரசு பெருமுதலாளிகளுக்காகச் செயல்பட்டு வருவதாகவிமர்சித்து வரும் ராகுல்காந்தி, உண்மை தன்னை அழகாக வெளிக்கொண்டு வந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் தனதுட்விட்டர் பதிவில், உண்மை தன்னைஎவ்வளவு அழகாக வெளிகொண்டு வந்துள்ளது. நரேந்திரமோடி மைதானம். ரிலையன்ஸ் முனை (RELIANCE END),அதானி எண்ட் (ADANI END), ஜெய்ஷாதலைமை வகிக்கிறார்.#HumDoHumareDo(நாம் இருவர், நமக்குஇருவர்)" எனத் தெரிவித்துள்ளார்.