Advertisment

லிங்காயத்து மடாதிபதியிடம் லிங்க தீட்சை பெற்ற ராகுல் காந்தி எம்.பி. (படங்கள்) 

Advertisment

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி லிங்காயத்து மடத்தில் இருந்து லிங்கதீட்சைப் பெற்றுள்ளார்.

கர்நாடகா மாநிலம், சித்ரதுர்காவில் உள்ள லிங்காயத்து மடம் ஒன்றிற்கு சென்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, அங்குள்ள மடாதிபதி சிவமூர்த்தி முருக முட், சிவமூர்த்தி முருக சரண ஆகியோரிடம் ஆசிபெற்றார். பின்னர், படிகத்தினால் ஆன சிவலிங்கத்தைப் பெற்று லிங்கதீட்சையையும் ராகுல் காந்தி பெற்றார். லிங்கத்தை கழுத்தில் அணிந்து தினந்தோறும் வழிபடுமாறு ராகுல் காந்தியைக் கேட்டுக் கொண்டதாக மடாதிபதி தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவுக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, லிங்காயத்து மடாதிபதிகளை நேரில் சந்தித்திருந்தார். தற்போது ராகுல் காந்தியும் லிங்காயத்து மடாதிபதியைச் சந்தித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Rahul gandhi Leader congress Lingayat karnataka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe