ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்த ராகுல், பிரியங்கா காந்தி...

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரத்தை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இன்று நேரில் சந்தித்துப் பேசினார்கள்.

rahul gandhi meets chidambaram in tihar

கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனாலும் இதே விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிந்திருந்த வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கார்த்தி சிதம்பரம், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் ப.சிதம்பரத்தை இன்று நேரில் சந்தித்துப் பேசினார்கள்.

P chidambaram priyanka gandhi Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe