
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் (08/12/2021) பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தும் அவரோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத்தும் மேலும் 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வெலிங்டனில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து இறந்தவர்களின் உடல்கள் நேற்று டெல்லி கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்களின் உடல்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் மரியாதைச் செலுத்தினார். அத்துடன் முப்படை தலைமை தளபதியின் மகள்கள், உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும் பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கூறினார்.இந்நிலையில் தொடர்ந்து பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, திமுக எம்.பி கனிமொழி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
Follow Us