ADVERTISEMENT

கேரளாவில் மீனவரை கட்டி அணைத்த ராகுல் காந்தி!!!

03:24 PM Aug 28, 2018 | santhoshkumar

ADVERTISEMENT

கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து, பெரு வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பேரிடரால் கேரளாவுக்கு சுமார் 19,000கோடி வரை சேதம் ஏற்பட்டுள்ளது. 7லட்சம் பேர் தங்களின் வீட்டை இழந்து, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். தற்போது வெள்ளம் வடிந்து இயல்பு நிலைக்கு கேரளா திரும்பி வருகிறது.


கேரளாவில் ஏற்பட்ட சேதங்களை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சென்று காண்பதாக கூறப்பட்டது. தற்போது கேரளாவில் விமானம் மூலம் சென்றடைந்துவிட்டார். வெள்ளத்தால் பாதிப்படைந்த இடங்களான செங்கண்ணூர், ஆலப்புழா, அங்கமாலி ஆகிய இடங்களை இன்றும் வயநாடு மாவட்டத்தை நாளையும் பார்வையிட உள்ளார், ராகுல்.


இந்நிலையில், முதலில் செங்கண்ணூர் வெள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை பார்த்து நலம் விசாரித்தார். அதனை முடித்துவிட்டு, வெள்ளத்தில் மக்களுக்கு உதவிகரங்களாக இருந்த மீனவர்களுக்கு விருது வழங்கி சிறப்பு செய்கிறார். அப்போது மீனவர் ஒருவர் ராகுல் காந்தியை அணைத்து கொள்ள, ராகுல் சிரித்துக்கொண்டே அவரை அணைக்கிறார்.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT