பத்திரிகையாளருக்கு முதல் உதவி அளித்த ராகுல் காந்தி...

டெல்லியிலுள்ள ஹுமாயூன் என்னும் சாலையில் ராஜஸ்தான் மாநில பத்திரிகையாளரான ராஜேந்திர வியாஸ் என்பவர் சாலை விபத்தால் காயமடைந்து தவித்துக்கொண்டிருந்தார். அந்த வழியாக சென்ற ராகுல் காந்தி இதனைக் கண்டு, காயமடைந்த பத்திரிகையாளரை தனது காரில் ஏற்றிக்கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

dapping rahul

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

காரில் சென்றுகொண்டிருந்தபோது அவரின் உதவியாளர், அதனை வீடியோ எடுத்திருக்கிறார். பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட, அந்த வீடியோ செம வைரலானது. அந்த வீடியோவில் பத்திரிகையாளர் ராகுல் காந்தியிடம், “மீண்டும் ஒருமுறை கைகுட்டையை வைத்து துடைத்துவிடுங்கள் என்னுடைய வேலைக்கு பயன்படும்” என்று கூறியுள்ளார். ராகுல் காந்தியும் சிரித்துகொண்டே அதை செய்கிறார்.

முன்னதாக ராகுல் காந்தி ஒரு முரை ஒடிஷாவில் பிரச்சாரத்திற்காக சென்றிருந்தபோது, பத்திரிகையாளர் ஒருவர் மேடையிலிருந்து கீழே விழ அப்போது ராகுல் காந்தி ஓடி வந்து அவரை தூக்கி நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Delhi journalist Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe