rahul gandhi

காங்கிரஸ் கட்சியின்மூத்ததலைவர்களுள் ஒருவர் கேப்டன்சதீஸ்சர்மா(73). முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, விமானியாகஇருந்தபோது அவரோடு நட்பானவர். பின்னர் இந்திரா காந்தி படுகொலைக்குப் பின், ராஜீவ்காந்தி அரசியலுக்கு வந்தபோது, சதீஸ்சர்மாவும் அரசியலில் இறங்கினார். ராஜீவ்காந்தியின் நம்பிக்கைக்குரிய நபராகஇருந்தஇவர், ராஜீவ்காந்தியின் மரணத்திற்குப் பிறகும் அரசியலில்ஈடுபட்டுவந்தார்.

Advertisment

1984 ஆம் ஆண்டிலிருந்து அரசியலில்ஈடுபட்டுவரும் இவர், மூன்றுமுறை மக்களவை உறுப்பினர், மூன்றுமுறை மாநிலங்களவை உறுப்பினர் எனஆறுமுறை நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்துள்ளார். இறுதியாக 2010 - 2016 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இந்தநிலையில் அவர் பிப்ரவரி17 ஆம் தேதி கோவாவில்உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

இதனையடுத்து அவரதுஉடல் டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டு இன்று (19.02.2021) இறுதி சடங்குகள் நடைபெற்றது. இதில்கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பிராகுல்காந்தி, இறுதி சடங்கிற்குப் பிறகு அவரது உடலைசுமந்துசென்று, கட்சியின்மூத்த தலைவரும், தனது தந்தையின்நண்பருமான சதீஸ் சர்மாவிற்கு மரியாதை செலுத்தினார்.

Advertisment