Advertisment

சாலையோரக் கடையில் மதிய உணவு சாப்பிட்ட ராகுல்காந்தி! (படங்கள்) 

கோவா மாநில சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒரு நாள் பயணமாக அம்மாநிலத்திற்கு சென்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, பாதுகாப்பு படையினர் யாரும் இல்லாமல் 5 கி.மீ. தூரம் வர இரு சக்கர வாகனத்தில் பயணித்தார்.

Advertisment

தெற்கு கோவாவில் மீனவர்களிடையே உரையாற்றிவிட்டு, ஒரு கிராமத்தில் உள்ள சாலையோர கடையில் மதிய உணவருந்திய ராகுல்காந்தி, இதைத் தொடர்ந்து, வாடகை இரு சக்கர வாகன சேவையில் ஈடுபட்டு வரும் நபரின் இரு சக்கர வாகனத்தில் திடீரென லிப்ட் கேட்டு ஏறிய ராகுல்காந்தி, பாதுகாப்பு படை வீரர்கள் யாரும் இல்லாமல் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றடைந்தார். சுமார் 5 கி.மீ. தூரம் வரை ராகுல்காந்தி தனியாக பயணித்ததால், பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisment

ராகுல்காந்தி 'பைக்' கில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

congress Goa ragul ganthi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe