rahul gandhi

Advertisment

மத்திய அரசின்வேளாண்சட்டங்களுக்கு எதிராகபோராடி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்றுநடத்தியட்ராக்டர்பேரணியில்வன்முறை வெடித்தது. இதன்பிறகு விவசாயிகள் முகாமிட்டுள்ள சிங்குஎல்லையிலும் கலவரம்வெடித்தது.

இந்த வன்முறை சம்பவங்களால், விவசாயிகள் போராடி வரும் டெல்லியின்சிங்கு, காசிபூர் மற்றும் டிக்ரிஎல்லைகளில் இணையதள வசதி முடக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் விவசாயிகள் கூடுவதைத் தடுக்க, எல்லைகளில் கான்க்ரீட் தடுப்புகள், முள்வேலிகள் உள்ளிட்ட தடுப்புகளை டெல்லி காவல்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் எல்லையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்புகளைதனதுட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ராகுல்காந்தி, "இந்திய அரசே, பாலங்களைஎழுப்புங்கள், சுவர்கள்வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.