Advertisment

ரஃபேல் போர் விமானத்தை பற்றி விமர்சனம் செய்துவரும் ராகுல் காந்தி தற்போது மோடியின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தையும் விமர்சித்துள்ளார். இதுகுறித்து நேற்று ட்விட்டரில் தெரிவித்த ராகுல் காந்தி, “ அரசின் கரூவூலத்தை மோடி எப்போது திறப்பார்?. ரஃபேல் ஊழலுக்காக 1லட்சத்தி 30ஆயிரம் கோடி அனில் அம்பானிக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 50 கோடி இந்தியர்களுக்காக 2000கோடி மட்டும்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்பட்இயென்றால் வருடத்திற்கு ஒரு நபருக்கு ரூ.40தான். இது ஒரு விளம்பரத்திற்கான பிரச்சாரம்தான்” என்று பதிவிட்டுள்ளார்.