/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/congy-in.jpg)
1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் 134 ஆம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. 1885, டிசம்பர் 28 ஆம் தேதி தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி எடுல்ஜி, நேரு கடந்து இன்று ராகுல் காந்தி காலம் வரை அரசியலில் நீடித்து வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் விழாக்கள் கொண்டாடி வருகின்றனர். இது பற்றி கூறியுள்ள ராகுல் காந்தி, 'காங்கிரஸ் கட்சியை கட்டியெழுப்புவதற்கு உதவிய கோடிக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள், ஆண்கள், பெண்கள் ஆகியோரின் தன்னலமற்ற சேவை மற்றும் பங்களிப்புகளை நாம் கொண்டாடுவோம். அப்படிப்பட்ட அந்த நாயகர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். நான் அவர்களை தலைவணங்குகிறேன்' என கூறியுள்ளார்.
தமிழகத்தின் சத்யமூர்த்தி பவனில் இந்த விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இது குறித்து தமிழக காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'சுதந்திர போராட்டத்தில் தங்கள் உயிர் உடமைகளை இழந்தும், சிறை சென்று தங்கள் சுகங்களை இழந்தும், நமக்கும் நமது சந்ததியினருக்கும் விடுதலை பெற்று தந்த அனைத்து காங்கிரஸ் தலைவர்கள்- தொண்டர்களுக்கு காங்கிரஸ் நிறுவன நாளான இன்று எங்களது வீரவணக்கத்தை செலுத்துகிறோம்' என பதிவிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)