Advertisment

பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி பரபரப்பு புகார்!

Rahul Gandhi complains about Prime Minister Modi

மத்திய அரசின் பல்வேறு அமைச்சக அதிகாரிகள் பலரை நேரடியாக நியமனம் செய்வதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி எம்.பி. எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு (யு.பி.எஸ்.சி.) பதிலாக ‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம்’ (ஆர்.எஸ்.எஸ்.) மூலம் அரசு ஊழியர்களைப் பணியமர்த்துவதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துகிறார்.

Advertisment

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள முக்கியப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் இட ஒதுக்கீடு வெளிப்படையாகப் பறிக்கப்படுகிறது. நாட்டின் உயர்மட்ட அதிகாரத்துவம் உட்பட அனைத்து உயர் பதவிகளிலும் தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதித்துவம் பெறவில்லை என்பதை நான் எப்போதும் கூறி வருகிறேன், அதை மேம்படுத்துவதற்குப் பதிலாக, நேரடி நியமனம் மூலம் அவர்கள் உயர் பதவிகளில் இருந்து மேலும் நீக்கப்படுகிறார்கள். இது யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகும் திறமையான இளைஞர்களின் உரிமைகள் மீதான கொள்ளை மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதியின் மீதான தாக்குதலாகும்.

Advertisment

ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரதிநிதிகள் முக்கியமான அரசாங்கப் பதவிகளை ஆக்கிரமிப்பதன் மூலம் என்ன சுரண்டுவார்கள் என்பதற்கு ஒரு தெளிவான உதாரணம் செபி, அங்குத் தனியார் துறையில் இருந்து வந்த ஒருவர் முதல் முறையாகத் தலைவராக நியமிக்கப்பட்டார். நிர்வாக அமைப்பு மற்றும் சமூக நீதி இரண்டையும் புண்படுத்தும் இந்த தேச விரோத நடவடிக்கையை இந்தியா கடுமையாக எதிர்க்கும். இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வர ‘ஐ.ஏ.எஸ். பதவி தனியார்மயமாக்கல்’ என்பது ‘மோடியின் உத்தரவாதம்’” எனக் குறிப்பிட்டுள்ளார்.

appointment upsc
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe