நாடு முழுவதும் 17-வது மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமான இன்று 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

rahul gandhi assasination attempt

Advertisment

இந்நிலையில் இன்று அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில் அவரது நெற்றியில் பச்சை நிறத்தில் ஒளி அடிக்கடி பட்டு மறைந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் முக்கிய தலைவர்களான அஹ்மத் படேல், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ரண்டீப் சுர்ஜேவலா ஆகியோர் இது குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் புகார் அளித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் தோன்றுவது துப்பாக்கியின் லேசர் என சிலரும், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் மைக்கில் பட்ட சூரிய ஒளி கேமரா லென்ஸில் பட்டு ராகுல் முகத்தில் பிரதிபலித்தது என ஒரு சிலரும் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டால் தான் மேலும் தகவல்கள் தெரிய வரும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/zI2I7A2EH-k.jpg?itok=2erfjoVO","video_url":" Video (Responsive, autoplaying)."]}