
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து மூன்று நாட்களாக ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்ட நிலையில் நான்காவது நாளாக அவர் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராவதற்கு ராகுல் காந்தி அவகாசம் கோரியுள்ளார். கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தாயின் உடல் நிலையை கவனித்து வருவதால் ராகுல் அவகாசம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)