டெல்லியில் ராகுல் காந்தி கைது....

rahul arrested

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் செல்ல எடுக்கப்பட்ட நடவடிக்கையை கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். அதேபோல, நாடு முழுவதும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் ஆர்ப்பட்டத்தை தொடங்கியது. டெல்லி சிபிஐ அலுவலகம் முன்பு ராகுல் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது.

ராகுல் காந்தி தலைமையில் டெல்லியிலுள்ள தயாள் சிங் கல்லூரியில் இருந்து தலைமை சிபிஐ அலுவலகம் வரை பேரணியை தொடங்கியுள்ளார். அவருடன் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை கலைக்க போலிஸார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். பின்னர், ராகுல் காந்தி மற்றும் மற்ற காங்கிரஸ் கட்சி தலைவர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.

Delhi Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe