Advertisment

மும்பை நீதிமன்றத்தில் ராகுல் காந்தி... தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு...

பெங்களூருவை சிறந்த எழுத்தாளரான கௌரி லங்கேஷ் கொல்லப்பட்ட வழக்கில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை தொடர்புப்படுத்தி பேசியதாக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்காக இன்று ராகுல் காந்தி மும்பை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

Advertisment

rahul gandhi appears in mumbai court for defamation case

கடந்த 2017 ஆம் ஆண்டு பெங்களுருவில் உள்ள தனது வீட்டின் முன்னே மர்ம நபர்களால் கொல்லப்பட்டார் எழுத்தாளர் கௌரி லங்கேஷ். இந்த வழக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை தொடர்புபடுத்தி பேசியதாக ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே, மிலிந்த் தியோரா மற்றும் சீதாராம் யெச்சூரி ஆகியோர் மீது மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைவரும் இன்று விசாரணைக்கு ஆஜரான நிலையில் நீதிமன்றத்தில் வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் சூழ்ந்துகொண்டு ராகுலுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

gauri lankesh karnataka Rahul gandhi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe