சட்டீஸ்கர் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் 11ஆம் தேதி, நவம்பர் 20 ஆம் தேதி என்று இரு கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த மூன்று தேர்தலிலும் பாஜகவே இங்கு வெற்றிப் பெற்றுள்ளது. இந்த வருடம் பாஜகவை தொல்வியடைய செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக பிரச்சாரங்களை மேற்கொள்ள இருக்கிறது. சட்டீஸ்கரில் பிரதமர் மோடியும் ராகுல் காந்தியும் இன்று சட்டீஸ்கரில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றனர். பிரதமர் மோடி பஸ்தார் மாவட்டம் ஜக்தல்பூர் உள்ளிட்ட இடங்களில் பா.ஜ வேட்பாளர்களை ஆதரித்தும், காங்கிரஸ் தலைவர் ராகுல் கன்கர் மாவட்டம் பகன்ஜோர், ராஜ்ந்தகோன், கைராக்கார்க், டோங்கார்க் ஆகிய பகுதிகளில் காங். வேட்பாளர்களை ஆதரித்தும் பிரசாரம் செய்கிறார்.