காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அந்த வகையில் இன்றுசான்பிரான்சிஸ்கோ சென்றராகுல் வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது, “பிரதமர் மோடி அருகில் கடவுள் அமர்ந்தால் பிரபஞ்சம் எப்படி உருவானது என்று அவருக்கே கற்றுக்கொடுப்பார். தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என இந்தியாவில் ஒரு கூட்டம் இருக்கிறது. வேலை வாய்ப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசியபிரச்சனைகளைப்புரிந்துகொள்ள இந்தியாவின் மோடி அரசு மறுக்கிறது. செங்கோல் மனோபாவம்கொண்டவர்களிடம்நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
இந்திய ஒற்றுமையாத்திரையைத்தடுக்க பாஜக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அதனையெல்லாம் என்னைமுன்னோக்கிச்செல்வதற்கான வழிகளாகவைத்துக்கொண்டேன். இந்தியர்களுக்கு வெறுப்பு மீது நம்பிக்கையில்லை. ஆட்சியில் இருப்பவர்கள்தான்அதனைப்பரப்புகிறார்கள். நீங்கள் முஸ்லீம்கள்எப்படித்தாக்கப்படுவதாக உணர்கின்றீர்களோ, அப்படித்தான் சீக்கியர்கள்,கிறிஸ்துவர்கள்,பட்டிலினமற்றும் பழங்குடியினரும் உணர்கிறார்கள்.
பெண்களுக்கான இடஒதுக்கீடுகுறித்துப்பேசுகிறோம். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கான 33%இட ஒதுக்கீடுமசோதாவை நிறைவேற்றுவோம். கூட்டணிக் கட்சிகள் தடுத்தாலும் உறுதியாகப் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை கொண்டு வருவோம்” என்றார்.