ADVERTISEMENT

ரஃபேல் விமானங்கள் இந்தியா வருகை... மத்திய அரசுக்கு ராகுலின் மூன்று கேள்விகள்...

11:41 AM Jul 30, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரஃபேல் விமானங்கள் நேற்று இந்தியா வந்தடைந்த சூழலில், இந்த ஒப்பந்தம் தொடர்பான மூன்று கேள்விகளை மத்திய அரசுக்கு முன்வைத்துள்ளார் ராகுல் காந்தி.

பிரான்ஸிடம் இருந்து சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்பில், 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் பல்வேறு சர்ச்சைகளைத் தொடர்ந்து, அண்மையில் இறுதிசெய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, மே மாதம் இந்தியாவிற்கு ஐந்து ரஃபேல் விமானங்களை வழங்க பிரான்ஸ் உறுதி அளித்திருந்தது. ஆனால் கரோனா பாதிப்பால் ஏற்பட்ட முடக்கம் காரணமாக ஏற்பட்ட தாமதத்தால், இப்போதுதான் இந்த விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பிரான்ஸிலிருந்து புறப்பட்ட இந்த விமானங்கள் நேற்று ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானப்படைத் தளத்திற்கு வந்தடைந்தன. இந்நிலையில், இதனை குறிப்பிட்டு மூன்று கேள்விகளை மத்திய அரசுக்கு முன்வைத்துள்ளார் ராகுல் காந்தி. இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "ரஃபேல் போர் விமானங்களைப் பெற்ற இந்திய விமானப்படைக்கு வாழ்த்துகள். மூன்று கேள்விகளுக்கு இந்திய அரசு பதில் அளிக்க முடியுமா.

ஒவ்வொரு ரஃபேல் விமானமும் ரூ.526 கோடிக்கு வாங்குவதற்கு பதிலாக ஏன் ரூ.1,670 கோடிக்கு வாங்கப்பட்டது? 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அதை ரத்து செய்து ஏன் 36 விமானங்கள் வாங்கப்பட்டன? இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிப்பதற்கு பதிலாக, திவாலான அனில் அம்பானி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது ஏன்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT