ADVERTISEMENT

இந்த சீரழிவிற்கு இவை மூன்றும் தான் காரணம்... நிதியமைச்சருக்கு ராகுல் காந்தி பதில்...

11:48 AM Aug 29, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

41 -வது ஜிஎஸ்டி கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழன் அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பொருளாதாரம் கரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டது, கரோனா கடவுளின் செயல்" எனக் குறிப்பிட்டார். மேலும், கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள மூன்று லட்சம் கோடி ஜிஎஸ்டி இழப்பை ஈடுகட்ட மாநில அரசுகளுக்கு இரண்டு தெரிவுகளை அவர் வழங்கினார். அதன்படி, மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியிடம் கடன் பெற்று, வரி வருவாய் அதிகரித்த பின்னர் அதனைத் திருப்பி செலுத்தலாம் எனவும், அல்லது, மாநில அரசுகளே பற்றாக்குறை தொகையை ஏற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "நாட்டின் பொருளாதாரம் மூன்று செயல்களால் அழிக்கப்பட்டது. முதலாவதாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அழிக்கப்பட்டது. இரண்டாவதாக தவறான சரக்கு மற்றும் சேவை வரிக் கொள்கையால் பொருளாதாரம் அழிக்கப்பட்டது. மூன்றாவதாக கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையை தவறாக பயன்படுத்தியதால், பொருளாதாரம் அழிந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT