உண்மைய உரக்கச் சொல்லுங்கள்- மீடு பற்றி ராகுல் காந்தி...

இந்தியாவில் #metoo என்னும் ஹேச்டேகின் மூலம் பென்கள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை தைரியமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதை திரையுலக பிரபலங்கள் தொடங்க பல்வேறு துறை பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்களை பகிர்கின்றனர். இதில் பாஜகவைச் சேர்ந்த எம்.ஜே அக்பர் என்னும் அமைச்சர் ஒருவர் சிக்கியுள்ளார். தன் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு இன்றுவரை அவர் பதிலும் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதை எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.

தற்போது ட்விட்டரில் ராகுல் காந்தி மீடு பற்றி குறிப்பிட்டுள்ளது என்ன என்றால், ”பெண்களை சுயமரியாதையுடனும், கவுரவத்துடனும் நடத்த வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது. தங்களுக்கு நடந்த துயரத்தை தைரியத்துடன் வெளியே கூறும்பவர்களை பாராட்டுகிறேன். உண்மையை உரக்க செல்லப்படவேண்டும். மேலும் இது மாற்றத்தை கொண்டு வரவேண்டும்” என்றார்.

metoo Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe