rahul gandhi about eia 2020

நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்த தனது வசதி படைத்த 'நண்பர்களுக்காக' பாஜக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு EIA 2020 மற்றொரு பயங்கரமான எடுத்துக்காட்டு என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisment

மத்திய அரசு உருவாக்கியுள்ள புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை திரும்ப பெற வேண்டும். சுற்றுச்சூழல் பேரழிவுகளைத் தடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கையின் நோக்கம் தேசத்தை கொள்ளையடிப்பதுதான் என்பது தெளிவாக தெரிகிறது. நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்த தனது வசதி படைத்த 'நண்பர்களுக்காக' பாஜக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு EIA 2020 மற்றொரு பயங்கரமான எடுத்துக்காட்டு" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment