ADVERTISEMENT

"லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியப் போகின்றன" - ராகுல் காந்தி சாடல்...

10:58 AM Jul 08, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் இந்தியாவில் லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியப் போகின்றன என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மத்திய அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை ஆகியவற்றைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் ராகுல் காந்தி. அந்த வகையில் சிகாகோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றை மேற்கோள்காட்டி மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி. சிகாகோ பல்கலைக்கழகம் நடத்திய அந்த ஆய்வின்படி, இந்தியாவில் கரோனா தடுப்பு ஊரடங்கால் 10 குடும்பங்களில் 8 குடும்பங்கள் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளன என்றும், நகர்ப்புறங்களைக் காட்டிலும், கிராமப்புறங்களில் உள்ள மக்கள் வருவாய் இழப்பால் மோசமாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வேலையை இழப்பார்கள் எனவும், இதன் காரணமாகக் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவு மோசமான வறுமை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, "இந்தியாவின் பொருளாதாரத்தைத் தவறாகக் கையாண்டது பெரும் சோகம். இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியப் போகின்றன. இந்த மவுனத்தை நீண்டகாலத்துக்கு ஏற்க முடியாது “ எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT