Advertisment

"வட்டிக்கடை போல் செயல்படாதீர்கள்" - ராகுல் காந்தி பேட்டி!

rahul gandhi about economic package

மத்திய அரசு வட்டிக்கடை போல் நடந்துகொள்வதை நிறுத்திவிட்டு, ஏழைகளுக்கு நேரடியாகப் பணத்தை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸின் முக்கியத் தலைவருமானராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisment

கரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பைச் சரி செய்யும் வகையில் மத்திய அரசு 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதியுதவி திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, "பிரதமர் மோடி, தான் அறிவித்த பொருளாதார தொகுப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மத்திய அரசு வட்டிக்குக் கடன் கொடுப்பவர் போல் நடந்து கொள்ளாமல் ஏழைகளுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் நேரடியாகக் கைகளில் பணத்தை வழங்கிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 200 நாட்கள் வேலை அளிக்க வேண்டும். அதேபோல விவசாயிகளுக்குப் பணம் செலுத்த வேண்டும். ஏனெனில், அவர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம். ஏழைகளுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் நேரடியாகப் பணத்தை மத்திய அரசு வழங்காதவரை பொருளாதாரச் சக்கரம் சுழலாது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இப்போதே மத்திய அரசு உதவி செய்ய வேண்டும், காலம் தாழ்த்தக்கூடாது. தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் பணம் தேவை. அவர்களுக்குக் கடன் தேவை இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

Rahul gandhi corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe