கரோனா ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்தாலும், இந்த நேரத்தில் நமது விஞ்ஞானிகள், பொறியாளர்கள் வாயிலாக இதற்கு ஒரு தீர்வு காண்பதற்கான நல்ல வாய்ப்பும் கிடைத்துள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisment

rahul gandhi about covid crisis

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 22 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை இந்தவைரஸ் காரணமாக 14,000-க்கும் பாதிக்கப்பட்டு, 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1900 பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனாவை கட்டுப்படுத்தும்விதமாக நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த நோய்த்தொற்றுக்கு மருந்து கண்டறியவும் ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர். இந்நிலையில் இந்தச் சூழல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "கரோனா தொற்றுநோய் ஒரு மிகப்பெரியசவாலாக இருந்தாலும், இது நமக்கு கிடைத்துள்ள ஒரு வாய்ப்பாகும். இந்த நெருக்கடியான நேரத்தில் நமது விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தரவு வல்லுநர்கள் அடங்கிய நமது மிகப்பெரிய குழுவைத் திரட்டி புதுமையான தீர்வுகளைக் கண்டறிவதற்கு முயற்சி செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.