Advertisment

"தவறான பந்தயத்தில் வெற்றிக்காக ஓடுகிறோம்" - ராகுல் காந்தி சாடல்...

rahul gandhi about corona outbreak

Advertisment

இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துவரும் சூழலில், மத்திய அரசின் நடவடிக்கைகளை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், கடந்த இரு வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரிக்கும் வேகம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஒருபுறம் மத்திய அரசு ஊரடங்கு தளர்வை அமல்படுத்திவரும் சூழலில், மற்றொரு புறம் கரோனா பாதிப்பும் உயிரிழப்புகளும் இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது. கரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 5- ஆவது இடத்திலிருந்த இந்தியா, பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 4- ஆவது இடத்துக்கு நகர்ந்தது. இந்நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "தவறான ஒரு பந்தயத்தில் வெற்றி பெறும் பாதையில் இந்தியா வேகமாகப் பயணித்து வருகிறது. ஆணவம் மற்றும் திறமையின்மையின் கலவையின் விளைவாக ஏற்பட்ட ஒரு பயங்கரமான சோக நிகழ்வு” எனத் தெரிவித்துள்ளார்.

corona virus Rahul gandhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe