rahul gandhi about china border issue

Advertisment

சீனர்கள் இந்திய நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதை மக்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதே தேசபக்தி என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பு, பொருளாதாரச் சரிவு, சீனா உடனான எல்லைப்பிரச்சனை உள்ளிட்ட பல விவகாரங்களில் மத்திய அரசைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் ராகுல் காந்தி. அந்தவகையில் சீன எல்லைப்பிரச்சனை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சீனர்கள் இந்திய நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். அந்த உண்மையை மறைத்து, அவர்களின் செயலை அனுமதிப்பது தேச விரோதமாகும். இதை மக்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதுதான் தேசபக்தி" எனத் தெரிவித்துள்ள அவர், "இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது. இந்த உண்மையை மறைத்து, ஆக்கிரமிப்புக்குத் துணைபோவது தேசவிரோதம், இந்த விவகாரத்தில் தொடர்ந்து உண்மைகளை உரத்த குரலில் பேசுவேன்" எனவும் தெரிவித்துள்ளார்.