கரோனா காலத்தில் பாஜக அரசு மேற்கொண்ட சில சாதனைகள் எனக்கூறி பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார் ராகுல் காந்தி.
கரோனா தடுப்பு, பொருளாதார சரிவு, சீனா உடனான எல்லைப்பிரச்சனை உள்ளிட்ட பல விவகாரங்களில் மத்திய அரசைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் ராகுல் காந்தி. அந்தவகையில் இந்த கரோனா காலத்தில் மத்திய அரசு படைத்த சாதனைகள் என்று ஒரு பட்டியலை வெளியிட்டு மத்திய அரசை விமர்சித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "கரோனா காலகட்டத்தில் அரசின் சாதனைகள்: பிப்ரவரி- நமஸ்தே ட்ரம்ப், மார்ச்-மத்தியப் பிரதேச அரசைக் கவிழ்த்தது, ஏப்ரல்-- மக்களை மெழுகு வர்த்தி ஏற்றச்செய்தல், மே- அரசின் 6-வது ஆண்டு கொண்டாட்டம், ஜூன் - பீகார் மெய் நிகர் பேரணி, ஜூலை--ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் முயற்சி" எனத் தெரிவித்துள்ளார்.