ADVERTISEMENT

இந்திய பகுதிகளை சீனாவுக்கு விட்டுக்கொடுத்து பிரதமர் துரோகம் செய்துவிட்டார் - ராகுல் குற்றச்சாட்டு!

05:33 PM Jun 23, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

லடாக் பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த 15 ஆம் தேதி இரவு நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த மோதலால் இருநாட்டு உறவுகளில் புதிய சிக்கல்கள் உருவாகியது. மேலும், கல்வான் பகுதியில் சீனாவிற்கும் இறையாண்மை உள்ளதாக சீனா தெரிவித்தது இந்தியாவிற்கு கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இந்நிலையில், அமைதியை நிலைநாட்டும் விதமாக சீனாவின் ‘சூசுல்’ எனுமிடத்தில் உள்ள மோல்டோ பகுதியில் இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் கலந்துகொண்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. நேற்று மதியம் தொடங்கிய இந்த கூட்டம், சுமார் 11 மணிநேரத்திற்கு மேலாக நீடித்து, நள்ளிரவு வரை நீண்டது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில், "இந்திய பகுதிகளை சீனாவுக்கு விட்டுக்கொடுத்து நமது ராணுவத்திற்கு பிரதமர் துரோகம் செய்துவிட்டார். இந்திய பகுதிகளை சட்டவிரோதமாக கைப்பற்ற சீனாவுக்கு எந்த உரிமையும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT