பிரதமர் மோடி தனது சமூகவலைதள கணக்குகளை கைவிடப்போவதாக செய்திகள் பரவிய நிலையில், பெண்கள் தினத்தை முன்னிட்டு தனது கணக்குகளுக்கு பெண்களை அட்மினாக நியமிக்கப்போவதாக மோடி அறிவித்துள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/zdfbzdfbz.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, "பேஸ்புக் , ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து விலகுவது குறித்து நேற்று யோசித்தேன்" என தெரிவித்தார். சமூக வலைதளங்களில் மிகுந்த ஈடுபாடுடன் இருக்கும் மோடி இவ்வாறு பதிவிட்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதேநேரம் பிரதமர் மோடி ட்விட்டரை விட்டு வெளியேற கூடாது என வலியுறுத்தி, அவரை பின்பற்றுபவர்கள் #NoModiNoTwitter, #NoSir உள்ளிட்ட ஹாஷ் டேக்களை பயன்படுத்தி ட்வீட் செய்து வந்தனர்.
இந்நிலையில், "வரும் மார்ச் 8 ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, நமது வாழ்விலும், பணியிலும் நமக்கு அதிகளவு ஊக்கமளிக்கும் பெண்களை கௌரவிக்கும் வகையில், எனது ட்விட்டர் கணக்கை அன்றைய தினம் பெண்களிடம் ஒப்படைக்கலாம் என இருக்கிறேன்" என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ள ராகுல் காந்தி, "இந்தியா அவசரநிலையை எதிர்கொண்டிருக்கும் இந்த நிலையில், உங்கள் சமூக ஊடக கணக்குகளுடன் கோமாளித்தனமாக விளையாடி நேரத்தை வீணாக்குவதை விட்டுவிடுங்கள். கரோனா வைரஸ் சவாலை ஏற்றுக்கொள்வதில் ஒவ்வொரு இந்தியருக்கும் கவனத்தை செலுத்துங்கள்" என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)