rahul about bjp promise for free covid vaccine

Advertisment

எப்போது கரோனா தடுப்பூசி கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ள உங்களது மாநிலத்தில் தேர்தல் எப்போது என்று பாருங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பு, பொருளாதார சரிவு, சீனா உடனான எல்லைப்பிரச்சனை உள்ளிட்ட பல விவகாரங்களில் மத்திய அரசைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் ராகுல் காந்தி. அந்தவகையில் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பெருந்தொற்றை பாஜக அரசியலாக்குகிறது என விமர்சனங்கள் எழுந்துள்ள சூழலில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "கரோனா குறித்த எதிர்கால திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்களு எப்போது கரோனா தடுப்பூசி கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ள உங்களது மாநிலத்தில் தேர்தல் எப்போது என்று பாருங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.