Advertisment

இங்கிலாந்து வங்கியின் தலைவர் ஆனாரா ரகுராம் ராஜன்... உண்மை என்ன?

இங்கிலாந்து நாட்டின் ரிசர்வ் வங்கியான பேங்க் ஆப் இங்கிலாந்தின் புதிய ஆளுநராக, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதன் உண்மைத்தன்மை என்ன?

Advertisment

Raguram

பேங்க் ஆப் இங்கிலாந்தின் கவர்னர் பதவி நிரப்பப்படவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அந்தப் பதவிக்குப் போட்டியிடுபவர்கள் பட்டியலில் ரகுராம் ராஜனும் இருப்பதாகவும் செய்திகள் பரவின. இந்த நேரத்தில்தான் அந்த வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சில செய்திகள் பரவின. இதுகுறித்து ரகுராம் ராஜன், ‘மன்னிக்கவும், அது பொய்யான செய்தி.. தற்போது எனக்கிருக்கும் வேலையை மகிழ்ச்சியுடன் செய்துவருகிறேன். அதனால், புதிதாகஎந்த வேலையையும்நான் தேடவில்லை; அப்படி எதுவும்கிடைக்கவும்இல்லை’ என விளக்கமளித்துள்ளார்.

Advertisment

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வதந்தியாக பரவிய இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையாக பதிவிட்டு, பின்னர் தான் வெளியிட்டது தவறான செய்தி என தெரிவித்துள்ளார்.

ரகுராம் ராஜன் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக கடந்த 2013ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அவர் மீண்டும் அந்தப் பதவியின் நீடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தபோது, அது வேண்டாமென மறுத்துவிட்டு, சிகாகோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசியராக பணிபுரியச் சென்றுவிட்டார். கடந்த 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை ரகுராம் ராஜன் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

NarendraModi Raguramrajan reservebank
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe