Skip to main content

இங்கிலாந்து வங்கியின் தலைவர் ஆனாரா ரகுராம் ராஜன்... உண்மை என்ன?

Published on 06/05/2018 | Edited on 06/05/2018

இங்கிலாந்து நாட்டின் ரிசர்வ் வங்கியான பேங்க் ஆப் இங்கிலாந்தின் புதிய ஆளுநராக, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதன் உண்மைத்தன்மை என்ன?

 

Raguram

 

பேங்க் ஆப் இங்கிலாந்தின் கவர்னர் பதவி நிரப்பப்படவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அந்தப் பதவிக்குப் போட்டியிடுபவர்கள் பட்டியலில் ரகுராம் ராஜனும் இருப்பதாகவும் செய்திகள் பரவின. இந்த நேரத்தில்தான் அந்த வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சில செய்திகள் பரவின. இதுகுறித்து ரகுராம் ராஜன், ‘மன்னிக்கவும், அது பொய்யான செய்தி.. தற்போது எனக்கிருக்கும் வேலையை மகிழ்ச்சியுடன் செய்துவருகிறேன். அதனால், புதிதாக எந்த வேலையையும் நான் தேடவில்லை; அப்படி எதுவும் கிடைக்கவும் இல்லை’ என விளக்கமளித்துள்ளார்.

 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வதந்தியாக பரவிய இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையாக பதிவிட்டு, பின்னர் தான் வெளியிட்டது தவறான செய்தி என தெரிவித்துள்ளார்.

 

 

ரகுராம் ராஜன் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக கடந்த 2013ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அவர் மீண்டும் அந்தப் பதவியின் நீடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தபோது, அது வேண்டாமென மறுத்துவிட்டு, சிகாகோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசியராக பணிபுரியச் சென்றுவிட்டார். கடந்த 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை ரகுராம் ராஜன் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

இன்றே கடைசி - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

TODAY LAST- PETROL PUNK OWNER'S ASSOCIATION NOTICE

 

2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப். 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.

 

TODAY LAST- PETROL PUNK OWNER'S ASSOCIATION NOTICE

 

மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அவசரம் காட்ட வேண்டாம் எனவும், 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் இறுதிவரை புழக்கத்தில் இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்திருந்தார். இன்று செப்.28 ஆம் தேதி என்ற நிலையில் இன்று மட்டுமே பெட்ரோல் பங்கில் 2000 ரூபாய் தாள்கள் பெறப்படும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. செப்.30 அரையாண்டு முடிவு நாள் என்பதால் 29 ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றால் செப்.30 வங்கிகளில் மாற்றுவது கடினம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே போக்குவரத்து துறை ஊழியர்கள் 2000 ரூபாயை பயணிகளிடம் இருந்து பெறக்கூடாது. அப்படி பெற்றால் 2000 ரூபாயை பெற்றவர்களே அதற்கு பொறுப்பு எனக் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

“சிவ சக்தி என்று பெயரிடுவதில் எந்த சர்ச்சையும் இல்லை” - இஸ்ரோ தலைவர் சோமநாத்

Published on 27/08/2023 | Edited on 27/08/2023

 

There is no controversy in naming Shiva Shakti ISRO chief Somanath

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு நிலவுக்கு மிக அருகில் சென்றதைத் தொடர்ந்து கடந்த 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இந்தியா முழுவதும் இந்த சாதனை கொண்டாடப்பட்டு வருகிறது. நிலவின் தென் பகுதியில் இறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆய்வுக்கான தனது பயணத்தை நிலவின் தென் துருவத்தில் தொடங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

 

இதற்கிடையில் நிலாவில் லேண்டர் தரையிறங்கிய போது, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அடுத்து கிரீஸ் நாட்டின் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியதும், டெல்லியிலிருந்து நேராக நேற்று பெங்களூருவில் வந்திறங்கினார். இதையடுத்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சந்திரயான் - 3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளைச் சந்தித்து தனது பாராட்டுகளைத் தெரிவித்து அவர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்பு பேசிய பிரதமர் மோடி, “சந்திரயான் - 3 திட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமாக உள்ளது. எனவே விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடம் சிவசக்தி என்று பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த சக்தி என்பது பெண்களின் சக்தியையும் குறிக்கும். அதேபோன்று 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 நிலவில் தனது இடத்தைப் பதித்த இடம் திரங்கா (மூவர்ணக்கொடி) என அழைக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் சந்திரயான் 3 தரையிறங்கிய இடத்திற்கு சிவ சக்தி என்று பெயர் சூட்டப்பட்டது குறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத் விளக்கமளித்துள்ளார். அதில், “அறிவியலும், நம்பிக்கையும் இருவேறு பொருள்கள் கொண்டவை. இரண்டையும் கலக்க வேண்டிய அவசியம் இல்லை. பல்வேறு நாடுகள் நிலவில் தாங்கள் தரையிறங்கிய இடங்களுக்கு பெயர்கள் வைத்துள்ளன. பெயர் சூட்டிக்கொள்வதற்கு அந்தந்த நாடுகளுக்கு உரிமை உண்டு. அதே சமயம் சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு சிவ சக்தி என்று பெயரிடுவதில் எந்த சர்ச்சையும் இல்லை” என தெரிவித்துள்ளார்.