Advertisment

ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைப்பயணம் தொடக்கம்

ragul gandhi Bharat Jodo Nyay Yatra starts

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம்ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமை பயணம்' என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகரில் மொத்தம் 135 நாட்கள், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி ‘பாரத் நீதி யாத்திரை’ (மக்கள் சந்திப்பு பயணம்) எனும் பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாம் கட்ட நடைப்பயணத்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

Advertisment

இதனைத்தொடர்ந்து, ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு மணிப்பூர் மாநில அரசு அனுமதி தர மறுத்தது. பின்பு கடந்த 10 ஆம் தேதி, இம்பால் மாவட்ட ஆட்சியர், ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் ராகுல் காந்தியின் நடைப்பயணம் இன்றுதொடங்கியுள்ளது.இந்த இரண்டாவது பயணம் மணிப்பூரிலிருந்து மும்பை வரை நடக்கிறது. இன்று (14.01.2024) தொடங்கி, மார்ச் 20 ஆம் தேதி வரை நடக்கவுள்ளதாகத்திட்டமிட்டுள்ளனர். 66 நாட்களுக்கு மேலாக 6713 கிலோமீட்டர்நடக்கவுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம், மேற்கு வங்கம், சட்டீஸ்கர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 15 மாநிலங்களில் 110 மாவட்டங்கள் 100 மக்களவைத்தொகுதிகள் அடங்கும்.

Advertisment
manipur congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe