பிரான்ஸ் நாட்டில் இருந்து பெறப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் முறைப்படி இணைக்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம், அம்பாலா விமானப்படை தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் சர்வ மத பிரார்த்தனையுடன் 5 ரஃபேல் போர் விமானங்கள் இணைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பதாரியா, பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ரஃபேல் போர் விமானங்கள் இணைப்பு நிகழ்ச்சியில், சாரங் ஏரோபேட்டிக்ஸ் குழுவினரின் கண்கவர் சாகச நிகழ்ச்சி நடந்தது. மேலும் விமானப்படை தளத்தில் தண்ணீர் பீய்ச்சியடித்து ரஃபேல் விமானங்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.