கடந்த மாதம் ரஃபேல் போர் விமானம் குறித்த முக்கிய விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து இன்று மத்திய அரசு ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த விதிகளையும் மீறவில்லை, ஒப்பந்தம் தொடர்பாக 48 உள்நாட்டு கூட்டங்கள், பிரான்ஸ் குழுவுடன் 26 கூட்டங்கள் என மொத்தம் 74 கூட்டங்கள் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஃபேல் ஒப்பந்தம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்....
Advertisment
Follow Us