Advertisment

அம்பானியை திரும்பிப் பார்க்க வைத்த மளிகைக்கடைக்காரர்... 1,000 கோடி டாலரைத் தொட்ட சொத்து மதிப்பு...

கரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ள நிலையில்,கடந்த ஒருமாத காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களான அம்பானி, அதானி, ஷிவ் நாடார் போன்றவர்கள் பல ஆயிரம் கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர்.இந்தச் சூழலில் இந்தியத் தொழிலதிபரான ராதாகிஷன் தமானி மட்டும் கடந்த ஒருமாதத்தில் மிகப்பெரிய லாபத்தை ஈட்டியுள்ளார்.

Advertisment

ss

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.7 லட்சம் என்ற அளவிலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.6 லட்சம் என்ற அளவிலும் உள்ளது.தா க்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85,000-ஐ கடந்துள்ளது.இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால் 5700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 166 பேர் உயிரிழந்துள்ளனர், 473 பேர் குணமடைந்துள்ளனர்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாகப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்ததுடன்,பெருநிறுவன உரிமையாளர்களின் சொத்து மதிப்பும் பெருமளவு சரிந்தது.ஆனால்,இந்த நிலையிலும் அவென்யூ சூப்பர் மார்க்கெட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் ராதாகிஷன் தமானியின் சொத்து மதிப்பு பெருமளவு உயர்ந்துள்ளது.அவென்யூ சூப்பர் மார்க்கெட்ஸ் லிமிடெட் பங்கு விலை 5 சதவீதம் வரை உயர்ந்துள்ள நிலையில்,ராதாகிஷன் தமானியின் சொத்து மதிப்பு 1,000 கோடி டாலருக்கு மேல் அதிகரித்துள்ளது.

மும்பையில் ஒற்றைப் படுக்கை அறை குடியிருப்பில் தனது வாழ்க்கையைத் தொடங்கி, 2002 ல் மும்பையில் தனது முதல் மளிகைக் கடையைத் தொடங்கிய ராதாகிஷன் தமானி,இன்று இந்தியா முழுவதும் 72 நகரங்களில் 196 சூப்பர் மார்க்கெட்களை இயக்கி வருகிறார்.

http://onelink.to/nknapp

ஊரடங்கு காலத்தில் இவரது நிறுவனத்தின் கடைகளில் மக்கள் அதிகளவில் பொருட்களை வாங்கி வருவதால்,பங்குச்சந்தையிலும் இவரது நிறுவனப் பங்குகளின் விலை அதிகளவு உயர்ந்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் அம்பானியே பங்குச்சந்தையில் லாபமீட்ட முடியாமல் தவித்து வரும் நிலையில் ராதாகிஷன் தமானியின் வளர்ச்சி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

mukesh ambani corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe