Rabies vaccine instead of corona vaccine ... shocking incident!

Advertisment

கரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய்கடி தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனாவிற்கு எதிரான ஒரே ஆயுதம் தடுப்பூசி என்ற நோக்குடன் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. முதல் டோஸ் முடிந்து இரண்டாம் டோஸ், பூஸ்டர் டோஸ் வரை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் கரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய்கடி தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசத்தின் லாகீம்பூர் அருகே உள்ள நயாபுர்வா என்ற இடத்தில் ஒருவர் கரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்ற நிலையில் ஏற்கனவே அவர் கரோனா முதல் டோஸ்தடுப்பூசி செலுத்திக்கொண்டது தொடர்பான தகவலை கோவிட் இணையதளத்தில் பெற அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றபோது முதல் டோஸாக வெறிநாய்கடிக்கான மருந்து செலுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதில் அந்த நபரின் உடல்நலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் கரோனா தடுப்பூசிக்கு பதிலாக எப்படி வெறிநாய்கடி தடுப்பூசி தவறுதலாக செலுத்தப்பட்டது என்று விசாரணை செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.