Published on 15/09/2018 | Edited on 15/09/2018
பிரதமர் மோடி தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு மஹாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை இவரின் கீழ் இருக்கும் மத்திய அரசு தொடங்கிவைத்தது.
செப்டம்பர் 15 ஆம் தேதி(இன்று) தூய்மையே உண்மையான சேவை என்று புதிய திட்டத்தை தொடங்கியுள்ளர். இதன் ஒரு பகுதியாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பரிடாபாத்தில் உள்ள ஒரு தெருவை பெருக்கி சுத்தம் செய்தார்.