Advertisment

உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் பதவியேற்பு!

R Mahadevan swearing in Supreme Court Judge

Advertisment

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடங்களில் காலியாக இருந்த 2 இடங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்திருந்தது. அதில் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்தது. அதே போன்று ஜம்மு - காஷ்மீர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த நோங்மெய்காபம் கோட்டீஸ்வர் சிங்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும் கொலிஜியம் பரிந்துரை செய்தது.

நீதிபதி கோட்டீஸ்வர் சிங்கின் இந்த நியமனத்தின் மூலம் மணிப்பூர் மாநிலத்தில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் முதல் நீதிபதி ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி மகாதேவனுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.

R Mahadevan swearing in Supreme Court Judge

Advertisment

இந்நிலையில் நீதிபதிகள் மகாதேவன், கோடீஸ்வர் சிங் ஆகியோர் இன்று (18.07.2024) உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர். இவர்கள் இருவருக்கும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

justice
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe