/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/psoter.jpg)
பீஹார் தலைநகர் பாட்னாவின் முக்கிய பகுதிகளில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் இருப்பது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் அந்த போஸ்டரில் நரேந்திர மோடியின் படம் மட்டும் கார்ட்டூனாக இருக்கிறது. அந்த போஸ்டரில் சொல்லப்பட்டிருப்பதாவது, “ ஒரு ரஃபேல் போர் விமானத்தின் விலையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை என்று அச்சிடப்பட்டிருக்கிறது. இந்த போஸ்டர் அந்த நகரத்தின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும் அதில், நாடு முழுவதும் மோடி 35 விமான நிலையங்களை திறந்துவைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அவை எங்கு அமைக்கப்பட்டுள்ளன, அவற்றின் பெயர் என்ன என்பதை யாரேனும் கூற முடியுமா? இந்த இரு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நபருக்கு துர்கா பூகை முன்னிட்டு 5 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)