Advertisment

கல்குவாரியில் வெடி விபத்து; 6 பேர் பலி - பிரதமர் இரங்கல்!

karnataka quarry

கர்நாடக மாநிலம் பெங்களூருஅருகே அமைந்துள்ளசிக்கபல்லாபூர் பகுதியில், கல்குவாரி ஒன்றில்வெடிவிபத்துஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் சிக்கி, 6 பேர் உயிரிழந்தனர். ஜெலட்டின் குச்சிகள் வெடித்தன்காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து அறிந்ததும் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.

Advertisment

இந்தச் சம்பவம்குறித்துபேசிய அவர், “வெடித்தவைசட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட வெடிபொருட்கள். இந்தச் சம்பவம்சட்டத்தின் மூலம் கையாளப்படும். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். இந்தக் கல்குவாரியில், ஏற்கனவே சட்ட விரோதமாக வெடிபொருட்களைப் பதுக்கியதற்காக, காவல்துறை சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்தச் சம்பவத்திற்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "கர்நாடகாவின் சிக்கபல்லாபூரில் நடந்த விபத்தால் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து வேதனையடைந்தேன். துயரமடைந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Yeddyurappa quarry karnataka
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe