jkl

Advertisment

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டார். ஜப்பான் நாட்டில் இந்த ஆண்டு குவாட் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. உலக தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ஜப்பான் கடந்த சில மாதங்களாக செய்து வந்தது. இந்நிலையில் பல்வேறு நாடுகளின் அதிபர்களோடு, இந்திய பிரதமர் மோடியும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். மேலும் மாநாட்டின் ஒருபகுதியாக அமெரிக்க அதிபர், ஜப்பான் பிரதமர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச உள்ளார்.