மகாராஷ்டிராவில்பால் கொள்முதல் விலையைகுறைந்தபட்சம் லிட்டருக்கு 30 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒருபகுதியாக கர்நாடக மாநிலம் பெல்காமிலிருந்து வந்த மூன்று பால் டேங்கர் லாரிகளை சிறைப்படுத்திய விவசாயிகள் அந்த லாரிகளில் இருந்த 25,000 லிட்டர் பாலையும் ரோட்டில் கீழே ஊற்றியும்,பால் பாக்கெட்டுகளை உடைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதன் பின் பால் ஏற்றி வந்த லாரிகள் போலீசாரால் பாதுகாக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
அதேபோல் சோலாப்பூரில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 30 ரூபாய் என நிர்ணயிக்க கோரி பாலை தலையில் ஊற்றி குளித்தும், நாய்களுக்கு பாலூற்றியும் நூதனபோராட்டத்தில் ஈடுபட்டனர்.