Skip to main content

பழுதான ரயிலை கைகளால் தள்ள வைத்த அவலம்!

Published on 30/08/2021 | Edited on 30/08/2021

 

hj

 

மத்தியப்பிரதேசத்தில் ஹர்தா என்ற இடத்தில் ரயில்வே ஊழியர்கள் மின்சார வயர்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வந்த ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நின்றது. ரயில் நின்றதற்கான காரணம் தெரியாமல் தவித்த ஊழியர்கள், அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் ரயிலை தள்ளியுள்ளனர்.

 

ஒரு தண்டவாளத்தில் இருந்து அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்திற்கு இதன் மூலம் ரயிலை நகர்த்தியுள்ளனர். இந்நிலையில், ரயிலை கைகளால் தள்ள வைத்த ரயில்வே அதிகாரிகளின் செயல் அங்கிருந்த பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டிக்கெட் பரிசோதகர் கையைக் கடித்த பெண்; ஓடும் ரயிலில் பரபரப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Woman bites ticket inspector hand in moving train

ரயிலில் டிக்கெட் பரிசோதகரைக் கடித்த இளம்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் இருந்து நேற்று முன் தினம் விரார் நோக்கி மின்சார ரயில் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அந்த ரயில் தகிசர் - மிரோரோடு இடையே சென்றுக்கொண்டிருந்தபோது, அதிரா(26)  என்ற பெண் டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில், ரயில் பெட்டியில் இருந்த சிங் என்ற பெண்ணிடம் டிக்கெட் பரிசோதனை செய்வதற்காக டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், தனது கணவர் வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய டிக்கெட்டை காட்டியுள்ளார். ஆனால், இந்த டிக்கெட் செல்லாது என்று கூறிய பரிசோதகர் அதிரா, அடுத்து வரும் மிரா ரோடு ரயில் நிலையத்தில் இறங்குமாறு கூறியுள்ளார். இதனால்  இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெண் பயணி மிராரோடு ரயில் நிலையம் வந்ததும், டிக்கெட் பரிசோதகர் அதிராவின் கையை கடித்துவிட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அதிரா கத்தி கூச்சலிட அக்கம்பக்கத்தில் இருந்த மற்ற பயணிகள் பெண் பயணியை பிடித்து ரயில்வே போலீஸிடம் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட பரிசோதகருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பெண் பயணிமீது வழக்குப்பதிவு செய்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை; மீட்பு பணிகள் தீவிரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
A child who fell into a borehole; Rescue operations are intense

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று நேற்று (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், “ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது.  தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ரேவா மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனில் சோன்கர் கூறும்போது, “சிறுவனின் பெயர் மயூர். தனது நண்பர்களுடன் சேர்ந்து அறுவடை செய்த கோதுமை பயிரிடப்பட்ட வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். மற்ற குழந்தைகள் அவருக்கு உதவ முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால்  உடனடியாக மயூருடைய பெற்றோருக்குத் தகவல் கொடுத்தனர். இது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் 3.30 மணியளவில் ஸ்டேஷன் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர் மீட்புப் பணியில் 2 ஜேசிபிகள், கேமராமேன்கள் குழு ஈடுபட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புக்குழு குழு பனாரஸில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், “இந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன. குழந்தையைக் காப்பாற்ற அரசு நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் செய்யும். எம்எல்ஏ சித்தார்த் திவாரி அந்த இடத்தில் இருக்கிறார். குழந்தையை மீட்கும் முயற்சியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.