Skip to main content

2,000 இ-ஸ்கூட்டர்களை திரும்ப பெற்ற பியூர் இ.வி!

Published on 21/04/2022 | Edited on 21/04/2022

 

Pure EV recalls 2000 e-scooters!

 

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒகினவா, ஓலா நிறுவனங்களின் எலக்ட்ரிக் பைக்குகள் சாலையிலேயே தீப்பிடித்து எரியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் எலக்ட்ரிக் பைக் வாங்க வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டுவதாகவும், இதனால் எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் எலக்ட்ரிக் பைக் தயாரிக்கும் பிரபல நிறுவனமான ஒகினவா பேட்டரியில் கோளாறு உள்ளதாக 3,215 வாகனங்களைத் திரும்பப் பெற்றுள்ளது. வாகனங்கள் திடீரென சாலையில் தீப்பற்றிய சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

 

bike

 

இந்நிலையில் 2000 இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக பியூர் இ.வி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் பியூர் இ.வி நிறுவனத்தினால் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட இ-ஸ்கூட்டர்களில் நேர்ந்த தீ விபத்துக்களை அடுத்து இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் எடுத்துள்ளது. குறிப்பாக இ- டிரன்ஸ் பிளஸ் மற்றும் இ-ப்ளுட்டோ 7 ஜி இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தெலுங்கானாவில் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து தீ பற்றியதில் 80 வயதான முதியவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

"மற்ற எரிபொருள் வாகனத்தை விட மின்சார வாகனங்களில் தீ விபத்து குறைவே"- ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தகவல்! 

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

"Electric vehicles are less prone to fire than other fuel vehicles" - Ola CEO Information!

 

மின்சார வாகனங்களில் தீ விபத்து நேரிடலாம்; ஆனால் மற்ற எரிபொருட்களின் இயங்கும் வாகனங்களை விட விபத்து குறைவு என ஓலா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். 

 

மின்சார வாகனங்களில் தீப்பிடிப்பது குறித்த தகவல் அடிக்கடி வெளியாகிறது. இது குறித்து ஓலா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மின்சார வாகனங்களில் தீ விபத்து நேரிடக்கூடும். ஆனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல நாடுகளிலும் இது நடக்கிறது. பெட்ரோல் உள்ளிட்ட மற்ற எரிப்பொருட்களில் இயங்கும் வாகனங்களோடு ஒப்பிடும் போது, மின்சார வாகனங்களில் தீப்பிடிப்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது என பவிஷ் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 

சமீபத்தில் டாடா நிறுவனத்தின் நெஸோன் வாகனம் மும்பை அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருந்தது. இது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இதுவரை மின்சார இரு சக்கர வாகனங்கள் மட்டுமே தீப்பிடித்த நிலையில், முதன்முறையாக கார் தீப்பிடித்திருக்கிறது. வாகனத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளன. இருந்தாலும், ஏன் தீப்பிடித்தது என்பது குறித்து விசாரிக்கவிருக்கிறோம் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்திருக்கிறது. 
 

Next Story

எரியும் எலக்ட்ரிக் பைக்குகள்... சரியும் மார்க்கெட்!

Published on 19/04/2022 | Edited on 19/04/2022

 

Sales of fallen electric bikes?

 

அண்மைக்காலமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் காட்சிகளும், சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில்கூட வேலூரிலும், திருப்பூரிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருந்தது. அதிலும் வேலூரில் நடந்த சம்பவத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் மின்சார ஸ்கூட்டர் விற்பனை இந்திய சந்தையில் சரிவு கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒகினவா, ஓலா நிறுவனங்களின் எலக்ட்ரிக் பைக்குகள் சாலையிலேயே தீப்பிடித்து எரியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் எலக்ட்ரிக் பைக் வாங்க வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டுவதாகவும், இதனால் எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் எலக்ட்ரிக் பைக் தயாரிக்கும் பிரபல நிறுவனமான ஒகினவா பேட்டரியில் கோளாறு உள்ளதாக 3,215 வாகனங்களைத் திரும்பப் பெற்றுள்ளது. இந்நிலையில் வாகனங்கள் திடீரென சாலையில் தீப்பற்றிய சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.