Advertisment

பஞ்சாப் இரயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினற்கு அரசு வேலை, ஓய்வுதியம்... -அமைச்சர் நவ்ஜோத் சிங்

nn

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தின்போது, இரயில் தண்டவாள்த்தில் நின்று வேடிக்கை பார்த்தவர்கள் மீது இரயில் மோதி 61 பேர் உயிரிழந்தனர். இதற்காக அம்மாநில அரசு உயிரிந்தவர்களின் குட்டும்பங்களுக்கு தலா ரூ.5 இலட்சம் நிவாரணம் வழங்கியது. இதன் தொடற்பாக நேற்று அம்மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் பேட்டி அளித்தார். அதில் அவர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் தகுதியானவர்களுக்கு அரசு வேலை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள முதியவர்களுக்கு ஓய்வுதியம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த விபத்தில் பெற்றோர்களை இழந்து ஆதரவற்று இருக்கும் குழந்தைகளை தத்தெடுக்க பலர் ஆர்வமாக உள்ளதாகவும், ஆனால் சட்டப்படி உள்ள நடைமுறைகளை மேற்கொண்டபின்பே, தத்தெடுக்க அரசு அனுமதி அளிக்கும் என்றும் தெறிவித்துள்ளார்.

Advertisment

Punjab navjot singh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe