பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியை நவ்ஜோத் சிங் சித்துராஜினாமா செய்தார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளதாக நவ்ஜோத் சிங் சித்துதனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதே போல் அம்மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங்குடன் கருத்து மோதல் காரணமாக நவ்ஜோத் சிங் ராஜினாமா முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி வரும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் ராஜினாமா செய்திருப்பது. காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.