தொழிலதிபர் நீரவ் மோடி ரூ. 13,000 கோடி கடன் பெற்று திருப்பி தராத பஞ்சாப் நேஷனல் வங்கியின் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ. 4,532 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. இந்த வங்கி சென்ற நிதியாண்டின் செப்டம்பர் மாத காலாண்ட்டில் ரூ. 560 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செப்டம்பர் காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நஷ்டம் ரூ. 1,349 கோடியாக இருக்கலாம் என்று பல்வேறு ஆய்வாளர்கள் கணித்திருந்தனர். ஆனால் அவர்கள் கணித்ததைவிட மூன்று மடங்காக பஞ்சாப் நேஷனல் வங்கியின் நஷ்டம் அதிகரித்துள்ளது.